இன்றைய காலகட்டத்தில் தமிழர்களாகிய நமக்கு ஆங்கில மோகம் என்னும் போதை தலைக்கேறியிருக்கிறது. எங்கும் ஆங்கிலம், எதிலும் ஆங்கிலம் என்ற போக்கே நிலவி வருகிறது. "மெல்லத் தமிழினிச் சாகும், அந்த மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்" என்றான் பாரதி. அவன் கூற்று நம் காலத்திலேயே அரங்கேறி விடுமோ என்ற அச்சம் எனக்கு எழுகிறது.
ஆந்திராவை சேர்ந்த இருவர் சந்திக்க நேர்ந்தால் அவர்கள் தெலுங்கில் தான் உரையாடி மகிழ்கிறார்கள். கர்நாடகத்தை சேர்ந்த இருவர் சந்திக்கும் போது பேசிக் கொள்வது கன்னடத்தில் தான். இது மராட்டியம், மலையாளம், இந்தி உட்பட எந்த மொழியை தாய்மொழியாய் கொண்டவர்க்கும் பொருந்தும். ஆனால் தமிழகத்தை சேர்ந்த இருவர் சந்திக்கும் போது ஆங்கிலத்தில் பேசுவதையே பெருமையாக நினைக்கிறார்கள். தமிழையே அறியாதவர் போல் நடந்து கொள்வதை மேன்மையாக நினைக்கிறார்கள். இது வெட்கி தலைகுனிய வேண்டிய செயல் அல்லவா?
உலகத்திலேயே மிகவும் பழமையான மொழி தமிழ் தான். ஒரு மொழியானது தோன்றும் போது முதலில் பேச்சு மொழியாய் (உலக வழக்கு) இருந்து தான் பின்னர் எழுத்துருவிற்கு (நூல் வழக்கு) வரும். இந்த கட்டத்தை அடைவதற்கே எந்த ஒரு மொழிக்கும் சில நூறு வருடங்கள் பிடிக்கும் என்பார்கள் மொழி வல்லுனர்கள். நூல் வழக்கை அடைந்து பல நூற்றாண்டுகள் கழித்து தான் இலக்கணங்கள் எந்த ஒரு மொழியிலும் தோன்ற முடியும். சுருங்கச் சொன்னால், ஒரு மொழியானது பல்லாயிரம் வருடங்கள் செழித்தோங்கிய பின்னர் தான் இலக்கண புத்தகங்களை வடிக்க முடியும். ஆனால் ஆங்கிலமே உலகில் தோன்றாத காலத்தில் நம்மிடையே தொல்காப்பியம், நன்னூல் போன்ற இலக்கண நூல்கள் வழக்கத்தில் இருந்திருக்கிறது. இவ்விலக்கண நூல்களை அடிப்படையாய் கொண்டு எண்ணற்ற இலக்கியங்களும் நம் மொழியில் தோன்றியிருக்கின்றன.
உலகில் முதலில் மனிதன் தோன்றிய இடம் இலெமூரியா கண்டம் (இன்றைய நிலையில் கடலுள் இருக்கிறது) தான். உலக முதல் மொழியும் தமிழ் தான். உலக முதல் நாகரிகம் தமிழர் நாகரிகமே. மற்ற மனிதரெல்லாம் காட்டுமிராண்டிகளாய் இருந்த போது கப்பல் ஓட்டி வாணிபம் நடத்திய ஒரே இனம் தமிழ் இனம் தான். இலெமூரியா கண்டத்தில் பல லட்ச வருடங்களுக்கு முன்னரே அகத்தியர் இயற்றிய அகத்தியம் என்னும் இலக்கண நூல் வழக்கத்தில் இருந்திருக்கிறது என்று சொன்னால் தமிழ் மொழியின் தொண்மையை கணக்கிட்டு பாருங்கள். இதை தான் , "கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க் குடி" என்பார்கள். ஆனால் கடல் கொண்டு விட்டதால் இலெமூரியா கண்டமும் அழிந்தது, அகத்தியமும் கடலில் மூழ்கி விட்டது என்பது வரலாறு. போலி பகுத்தறிவாளர்கள், கடலாவது?, கொள்வதாவது?, அகதியமாவது? ,இலக்கணமாவது?, கண்ணால் காணாமல் எப்படி நம்புவது என்றார்கள், சமீபத்தில் ஆழிப்பேரலை (சுனாமி) ஏற்படும் வரை. நமக்கு தெரியவில்லை என்பதற்காக ஆழிப்பேரலை என்பது பொய்யாகி விடுமா? அகத்தியம் தான் இல்லையென்று ஆகி விடுமா?
இத்தகு சிறப்பு பொருந்திய நம் தமிழில் பேசுவதையும், எழுதுவதையும் இழிச்செயலாக இனியும் எண்ணாதீர்கள். தமிழர்களாகிய நாம் முடிந்த வரை தமிழிலியே எழுத வேண்டும், தமிழிலியே பேச வேண்டும், தமிழிலியே கையொப்பமிட வேண்டும். என்னிடம் சமீபத்தில் நண்பர் ஒருவர் கேட்டார், "என்னங்க தமிழ்ல கையெழுத்து போடுறீங்க?", நான் திருப்பி கேட்டேன், " வேண்டுமென்றால் நான் இந்தியில் போடவா என்று?". பாவம், அவர் முகத்தில் ஈயாடவில்லை.
தலைப்பெழுத்து முதற்கொண்டு உங்கள் பெயரை தமிழிலேயே எழுதுங்கள். உதாரணமாக என் பெயரை எழுதும் போது மு. திருமால் அழகன் என்றே எழுத வேண்டும். M. திருமால் அழகன் என்று எழுவது பெரும் தவறு.'M' என்பது என்ன?. உலகில் எந்த மொழியிலும் அவர்கள் தலைப்பெழுத்தை வேற்று மொழியில் எழுதுவதில்லை. தங்கள் தாய்மொழியில் தான் எழுதுகிறார்கள். ஆனால் தமிழன் மட்டுமே தன் தலைப்பெழுத்தை ஆங்கிலத்தில் எழுதி அகமகிழ்கிறான்.
நான் ஆங்கிலம் வேண்டாமென்று சொல்லவில்லை. ஆங்கிலம் உட்பட அனைத்து மொழிகளையும் அறிந்து கொள்ளுங்கள், ஆனால் தமிழை உதாசினபடுத்தாதீர்கள் என்பது தான் என் ஆதங்கம். நீங்கள் சாப்பிடும் அரிசிச் சோறு தமிழாய் இருக்கட்டும், பொரியல், கூட்டு, அப்பளம் போல் மற்ற மொழிகள் இருக்கட்டும். சோற்றை ஆங்கிலமாக்கிவிட்டு, தயவு செய்து தமிழை ஊறுகாய் ஆக்கிவிடாதீர்கள். தமிழ் என்றால் என்னவென்று கேட்கும் நிலைக்கு நம் எதிர்கால சந்ததியினரை தயைக்கூர்ந்து தள்ளிவிடாதீர்கள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
ஏன் மால்? இதெல்லாம் சொல்றதில்லையா? நீ எவ்ளோ பெரிய தமிழ் பற்றாளன்.. எவ்ளோ பெரிய பேச்சாற்றல் மிக்கவன்.. நானே உன்னை வலைப்பூ தொடங்க சொல்லலாம் என்று இருந்தேன். ஆனால் உன் வேலைக்கு இடையில் இதற்கு நேரம் கிடைக்குமா என்று விட்டுவிட்டேன்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் நண்பா.. :)
நீ வலைப்பூ வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்யனும் மால். நான் அலைபேசியில் சொல்கிறென். இந்த பதிவுக்கு நான் விளம்பரம் தருகிறேன். தமிழார்வம் மிக்க என் நண்பர்கள் சிலர் உன்னை உற்சாகப் படுத்துவார்கள்.
இனி நீ வழக்கத்தைவிட அதிகமா கலக்கப் போற பார்.. :)
//நான் ஆங்கிலம் வேண்டாமென்று சொல்லவில்லை. ஆங்கிலம் உட்பட அனைத்து மொழிகளையும் அறிந்து கொள்ளுங்கள், ஆனால் தமிழை உதாசினபடுத்தாதீர்கள் என்பது தான் என் ஆதங்கம். நீங்கள் சாப்பிடும் அரிசிச் சோறு தமிழாய் இருக்கட்டும், பொரியல், கூட்டு, அப்பளம் போல் மற்ற மொழிகள் இருக்கட்டும். சோற்றை ஆங்கிலமாக்கிவிட்டு, தயவு செய்து தமிழை ஊறுகாய் ஆக்கிவிடாதீர்கள். தமிழ் என்றால் என்னவென்று கேட்கும் நிலைக்கு நம் எதிர்கால சந்ததியினரை தயைக்கூர்ந்து தள்ளிவிடாதீர்கள். //
பதிலளிநீக்குஅழகு..! :)
உன் விலாச அட்டைப் போதுமே உன் தமிழ் பற்றை பறைசாற்ற.. :)
ஆரம்பம் முதல் கடைசி வரை ஆங்கில வழிக் கல்வியில் படித்தாலும் இன்றும் தமிழுக்கே முக்கியத்துவம் தருகிறாய். அபூர்வமனிதன்பா நீ.. :)
அட...போட வைக்குதே உங்கள் எழுத்து....ஆமா யார் நீங்க? எப்படியும் எங்க பொடியன் அண்ணனுக்கு தெரிஞ்சவர் தானே....அவர் கிட்டயே கேட்டுக்கிறேன்..:)
பதிலளிநீக்குஎனக்கு திருமால் அழகன் என்று ஒரு நண்பர் இங்கு(சிங்கையில்) இருக்கிறார்.....நீங்கள் அவரல்லவே?
பதிலளிநீக்குநன்றாகச் சொன்னீங்க, மால். இயன்ற வரையில் தமிழில் பேசுவதோடு, தம் மக்களையும் தமிழ் படிக்க, எழுதச் செய்ய வேண்டும். தொடர்ந்து எழுதுங்க.
பதிலளிநீக்குசஞ்சய் நண்பரா நீங்க! வாங்க வந்து நம்ம ஜோதியில ஐக்கியமாகுங்க!வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஇப்படிக்கு
சஞ்சய் கொல வெறிப்படை
துபாய் கிளை கழகம்
அண்ணே வாங்க... கலக்குங்க... வாழ்த்துகள் !!
பதிலளிநீக்கு