பொங்கல் பொங்கல் பொங்கல் என்று
போற்றிட வந்திடும் பண்டிகை ஒன்று
பொலிவோடு தமிழர்தம் இல்லங்களில் நின்று
புன்னகை புரிந்திடும் தைத்திங்கள் அன்று!
பொங்கல் என்றாலும் பொங்கல் பொங்கல்தான்
பொங்கிவரும் புதுப்பானைச் சோறும் பொங்கல்தான்
திங்கள் என்றாலும் திங்கள் திங்கள்தான்
தீந்தமிழர் கொண்டாடும் தைத்திங்கள் திங்கள்தான்!
மான்விழி என்ற தமயந்திபால் சென்று
மஞ்சோடு அன்னம் வந்தது போன்று
மார்கழி என்ற மாதமும் சென்று
மகிழ்வோடு அனுப்புமே தைத்திங்கள் ஒன்று!
"பழையன கழிதலும் புதியன புகுதலும்" என்னும்
கூற்றுகேற்ப பழையதை நீக்கி புதியதை புகுத்தும்
மரபாம் முதல்படிஎன்று பொருட்கள் மட்டுமல்லாமல்
புதிய எண்ணங்களையும் தோற்றுவிப்பதே போகிப்பண்டிகை!
உலகினிக்கு ஒளியை ஈந்திடும் ஓர்
உன்னத தெய்வமாம் ஒளிர் சூரியன்
உழவுக்கும் அவனே உறுதுணை என்று
உளமார வணங்கி வைப்பதே பெரும்பொங்கல்!
காடு கழனியெலாம் உழுதிடும் மற்றும்
கபிலையும் இறைத்திடும் காளை மாடுகளுக்கு
கையோடு நன்றியைக் காட்டத் தான்
களிப்போடு வைப்பதே மாட்டுப்பொங்கல்!
மாடோடு மாடாய் உழைத்திடும் நம்
மனிதனும் மாடும் மகிழ்ந்து துள்ளிடவே
ஆடும் ஆட்டம் ஆட்டம் தான்
ஆனந்தம் பொங்கும் பாரிவேட்டை தான்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கலக்கல் கவிதை.. :)
பதிலளிநீக்கு